வேலூர்: தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை!

50பார்த்தது
வேலூர்: தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா பிச்சனூர் காளியம்மன்பட்டி சாமியார் மலையை அடுத்த விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 57). இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

ராஜமாணிக்கம் மரம் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கையில் பூச்சி கடித்து உள்ளது. அது புண்ணாகி பாதிப்பு ஏற்பட்டதால் கையில் விரல்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜமாணிக்கம் திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சாமியார்மலை பகுதியை சேர்ந்த சிலர் மலை மீது சென்ற போது அங்கு அடர்த்தியான மரங்கள் இருக்கும் இடத்தில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. அருகில் சென்று பார்த்த போது ராஜமாணிக்கம் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

தகவலறிந்ததும் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராஜமாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி