வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நேற்று (செப்.14) மாலை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியிடம் விஜயலட்சுமி என்ற பெண் ஆட்சியரின் கையைப் பிடித்துக் கொண்டு தனக்கு வீடு வழங்க வேண்டும் என்றும் பாதுகாப்பில்லாத சூழலில் வாழ்ந்து வருவதாகவும் 5 பிள்ளைகளை வைத்து தான் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும் தனக்கு வீடு ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்ததார்.
இதனையடுத்து அருகே இருந்த குடியாத்தம் கோட்டாட்சியர் சுபலட்சுமியிடம் மாவட்ட ஆட்சியர் அந்தப் பெண்ணின் விவரங்களை வழங்க கூறினார். அப்போது அந்தப் பெண் கலெக்டரின் கையைப் பிடித்துக் கொண்டு ஏன் மேடம் நான் கேக்குறது தப்பா. நான் ரொம்ப பேசுறனா. எனது ஆதங்கத்தில் தான் நான் அப்படி பேசுகிறேன் என தெரிவித்தார். அதற்கு மாவட்ட ஆட்சியர் அப்படியெல்லாம் நினைக்கவில்லை என கூறி அந்த பெண்னுக்கு ஆறிதல் கூறினார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது