மோப்பநாய் லூசி உயிரிழப்பு - மலர் வளையம் வைத்து மரியாதை

71பார்த்தது
வேலூர் மாவட்ட துப்பறியும் நாய் படை பிரிவில் "மோப்பநாய் லூசி" கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை சிறப்பாக பணி செய்து வந்தது. 2022ல் ஓய்வு பெற்ற மோப்ப நாய் லூசி வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தது.

வேலூரில் உள்ள துப்பறியும் நாய் படை பிரிவு மையத்தில் மோப்பநாய் லூசியின் உடலுக்கு காவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

2014 ஆம் ஆண்டில் தமிழக அளவில் நடைபெற்ற வெடிகுண்டு கண்டறிதல் பிரிவில் மூன்றாம் இடம் பெற்றதும், வி வி ஐ பி பாதுகாப்பு பணி வெடிகுண்டு சோதனையில் சிறப்பாக செயல்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி