குடியாத்தம் நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம்

591பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை சிவகாம சுந்தரி உடனுறை கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம் மாவட்ட அளவில் மிகவும் புகழ் பெற்றது.
வேலூர் மாவட்டத்திலேயே மிகப் பெரிய தேர்களில் கருப்புலீஸ்வரர் தேரும் ஒன்று சுமார் 42 அடி உயரம் கொண்ட இந்த தேர் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் தேரோட்டம் நடைபெறும்.
இந்தாண்டு தேரோட்டம் இன்று நடைபெறுவதை ஒட்டி தேர் திருவிழாவுக்காக சிறப்பு ஏற்பாடுகள் விழா கமிட்டி சார்பில் செய்யப்பட்டு இருந்தது. இன்று காலையில் குடியாத்தம் நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் கருப்புலீஸ்வரர்- சிவகாமசுந்தரி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து தேர் நிலை வரை பக்தர்களுடன் கொண்டுவரப்பட்டு தேரில் எழுந்தருளிக்கப்பட்டது.
தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. தேரோட்டத்தை தேரோட்டத்தை குடியாத்தம் எம்எல்ஏ அமலும் மற்றும் நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன் உள்ளிட்டார் தொடக்கி வைத்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் மாவிளக்கு கொண்டுவந்து தீபாராதனை செய்தனர், நேர்த்தி கடனுக்காக மிளகு மற்றும் உப்பு தேரின் மீது வீசி எறிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி