டெல்லி சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலங்களவை எம்.பியான சஞ்சீவ் அரோரா, லூதியானா மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில், பஞ்சாபில் இருந்து மாநிலங்களவைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.