திரௌபதி அம்மன் கோவிலில் அக்கினி வசந்த விழா

59பார்த்தது
வேலூர் மாவட்டம்

வேலூர் அருகே 74-ம் ஆண்டு அக்கினி வசந்த விழா 1000-க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் பங்கேற்ப்பு


வேலூர் அடுத்த அலுமேலுமங்காபுரம் பகுதியில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ திரௌபதியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது கோடையில் உறவையும் நட்பையும் பலப்படுத்தவும், பல்வேறு பகுதியில் உள்ள நட்பும் உறவும் ஒன்று சேர நடத்தப்படும் இந்த திருவிழா ஆண்டுதோரும் அனுசரிக்கப்பட்டு இந்த ஆண்டு 74-ம் ஆண்டாக நடத்தப்பட்டது.


இந்த நிகழ்வை முன்னிட்டு கடந்த 11 நாட்களாக மகாபாரத சொற்பொழிவு நடைப்பெற்று இன்று காலை துரியோதனன் வீர சொர்கம் அடையும் நிகழ்ச்சி நாடக கலைஞர்களால் நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்று மாலை சக்தி கரகம் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு தீ மிதிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் ஆண்கள் பெண்கள் என 1000-ற்க்கும் மேற்ப்பட்டோர் கங்கனம் கட்டி கொண்டு ஓம் சக்தி முழகத்தோடு பயபகுதியோடு தீமிதித்து அம்மனை வழிப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து 1000-க்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டணர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி