நடிகர்கள் விஜய் மற்றும் விஷால் அரசியலுக்கு வந்துள்ளது குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், நண்பர் விஜய் உட்சத்தில் இருக்கும்போது அரசியலுக்குள் வந்துள்ளார். அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறார். அவர் மென்மேலும் வெற்றி அடையணும்னு ராகவேந்திரா சாமிகிட்ட வேண்டிக்கிறேன் என கூறியுள்ளார். மேலும் விஷாலும் வந்துள்ளார். எல்லாருக்கும் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். மேலும் நீங்கள் நிறைய நல்லது செய்கிறீர்கள் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என கேட்டதற்கு எனக்கும் ஆசை தான் அரசியலுக்கு வர. ஆனால் நான் என் அம்மாவிடம் கேட்டுதான் எதையும் செய்வேன். அவர் வேண்டாம் என கூறியதால் அந்த எண்ணம் இல்லை என கூறியுள்ளார்.