பாலாற்ற பெருவெள்ளத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி ஊர்வலம்

70பார்த்தது
*திருப்பத்தூர் மாவட்டம் முதல் சென்னை பட்டினம் வரை உள்ள பாலாற்றை மாசு படுத்தாமல் தமிழக அரசு மேம்படுத்தினால் மக்கள் தூய்மையான தண்ணீரை பெற முடியும் பாலாற்று பெரு வெள்ளத்தில் உயிர் நீத்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு 121 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி ஆர் பாண்டியன் கோரிக்கை*

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 1903 ஆம் ஆண்டு பாலாற்று பெரு வெள்ளத்தில் உயிர் நீத்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு 121 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு மற்றும் பாலாற்று உரிமைப் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பாக நடைபெற்றது.

முன்னதாக வாணியம்பாடி பகுதியில் இருக்கும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மாணவர்கள் பெண்கள் பாலாற்றை மாசு படுத்தாமல் தூய்மைப்படுத்துவதை வலியுறுத்தியும் பாலாற்றில் ஆங்காங்கே தடுப்பணைகளை கட்டுவதை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி வாணியம்பாடி பேருந்து நிலையம் முதல் சி எல் ரோடு வழியாக வார சந்தை மைதானம் வரை பேரணியாக சென்று அங்குள்ள நினைவு தூணுக்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியரும் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி