தோல் தொழிற்சாலை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழப்பு

51பார்த்தது
வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலை தண்ணீர் சேகரிப்பு தொட்டியில் தவறி விழுந்து நபர் உயிரிழப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்த குப்புசாமி (50). இவர் வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் முன்பு காட்டியுள்ள தண்ணீர் தொட்டியில் சடலம் மிதிப்பதாக இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து நகர காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் வாணியம்பாடி அடுத்த உதயந்திரம் பகுதியை சேர்ந்த குப்புசாமி(50) என்பவர் தெரிய வந்தது. மேலும் இவர் கடந்த 31ஆம் தேதி மாலை நேரத்தில் தண்ணீர் தொட்டி மீது அமர்த்த மது அருந்து கண்டு இருந்ததை தெரியவந்தது. மேலும் மது போதையில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து இரண்டு நாட்களாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு தொழிற்சாலைக்கு விடுமுறை என்பதால் விபத்து குறித்து தெரிய வரவில்லை. இந்நிலையில் இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் சடலத்தை பார்த்து தகவல் கொடுத்த பின்னர் தான் விபத்து குறித்து தெரிய வந்தது.

சம்பவம் குறித்து நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி