சென்னையில் டிச., 6ஆம் தேதி நடக்கவுள்ள விழாவில், அம்பேத்கர் பற்றிய புத்தகத்தை விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட, தவெக தலைவர் விஜய் பெற்றுக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து உளவுத்துறை மூலம் அரசுக்கு தகவல் சென்றுள்ளதால் ஆளும் திமுக தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளதாம். ஏற்கனவே ஆட்சி, அதிகாரத்தில் பங்கு விவகாரத்தில் விசிகவின் கருத்து கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. திருமா கூட்டணியை விட்டு விலகலாம் என்றும் சொல்லப்படுகிறது.