*திருப்பத்தூர் அருகே குடியிருப்பு பகுதியில் கோழிகளோடு தோழிகளாக தோகை விரித்து மகிழ்ந்த மயில்களின் காட்சி பார்ப்போரை பரவசப்படுத்தியது. *
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மயில்களின் நடமாட்டம் தற்பொழுது இயல்பாக இருந்து வருகிறது. பொதுவாக மயில்களை காண வேண்டும் என்றால் காட்டுப்பகுதியிலோ அல்லது பறவைகள் சரணாலயங்களிலோ அல்லது மிருக காட்சி சாலைகளிலோ மட்டுமே காண முடியும். ஆனால் இயல்பு நிலைக்கு மாறாக எங்கோ காட்டுப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மைல்கள் திருப்பத்தூர் நகரத்தின் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிவது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அதுமட்டுமின்றி குடியிருப்பு பகுதியில் உள்ள கோழிகளோடு தோழிகளாக இணைந்து இறைத்தேடி தோகை விரித்து மகிழ்ந்து சுற்றி திரியும் மயில்களின் காட்சி பார்ப்போரை பரவசப்படுத்தி வருகிறது