*திருப்பத்தூரில் சுகாதார இயக்கத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை கட்டிடங்களை அமைச்சர் எ. வ வேலு பார்வையிட்டு ஆய்வு செய்து, மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொது மக்களின் மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார். *
திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் கூடுதல் கட்டிடங்களுக்கான கட்டுமான பணி பொதுப்பணித்துறை சார்பில் ரூபாய் 56 கோடி மதிப்பீட்டில் 13 ஆயிரத்து 445 சதுர மீட்டர் பரப்பளவில் நான்கு மாடி கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது.
கட்டுமான பணிகள் முடிவுறும் நிலையில் உள்ள மருத்துவமனை கட்டிடங்களை மாநில பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ. வ. வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து பொறியாளர்களிடம் அறிவுரை வழங்கினார்.
மீதமுள்ள பணிகளை துரிதமாக முடிவடையும் வகையில் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.