தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் தலைவர் விஜய் திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை தாக்கி பேசினார். மேலும் வருகிற 2026 தேர்தலில் தன்னுடைய கட்சி தனிப் பெரும்பான்மையில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். அடுத்தடுத்த செயல்பாடுகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அவர் கூறியிருந்தார். மாநாட்டில் கலந்து கொண்ட அவரின் HD புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.