இந்தியாவில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் வெப்பநிலை கணிசமாக உயர்ந்துள்ளது. வெப்ப அலை வீசுவதால் பலருக்கும் உடல் உபாதைகள் ஏற்படுகிறது. மேலும் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்கள் உயிரிழப்புகளையும் சந்திக்கின்றனர். இந்த நிலையில் வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழக அரசு அறிவித்துள்ளது. வெப்ப அலையால் மரணம் அடைபவர்களுக்கு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.