சென்னை சைதாபேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம், ‘திராவிட மாடல் ஆட்சி என்று கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் விமர்சனம் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எங்களின் நோக்கமெல்லாம் வளர்ச்சி குறித்தும், மக்களின் அவசிய தேவைகளை நிறைவேற்றுவது பற்றியும் தான். மற்றவற்றில் எங்களின் கவனம் சிதறாது, சிதையாது” என்றார்.