வீட்டில் வளர்த்து வரும் செடிகள் நன்றாக வளர்வதற்கு வெங்காயத்தோல், முட்டை ஓடு, வாழைப்பழத் தோல் போன்றவற்றை உரமாக பயன்படுத்தலாம். மேலும் சர்க்கரை இல்லாமல் டீ போட்டு அதை வடிகட்டி டீத்தூளை மட்டும் ஆற வைத்து, நன்றாக உலர்த்தி உரமாக சேர்க்கலாம். அரிசி வடிகட்டிய தண்ணீரையும் ஊற்றலாம். இது மட்டுமல்லாமல் காய்கறி கழிவுகள், சாணம் ஆகியவற்றை சேர்க்கலாம். ஆனால் காய்கறி கழிவுகள் அழுகி அதிக நாற்றம் வராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.