கையிலே சாலையை பேத்தெடுக்கும் வகையில் தரமற்ற சாலை

2928பார்த்தது
*திருப்பத்தூர் அருகே பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு போடப்பட்ட தார் சாலை தரமற்று இருக்கும் அவல நிலையை நிரூபிக்க அந்த பகுதி வாலிபர் வெறும் கைகளால் பெயர்த்து எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல். *

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பொம்மி குப்பம் ஊராட்சி பகுதியில் மாதா கோயில் பகுதியில் இருந்து புதிய அத்திக்குப்பம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தார் சாலை போட்டதாக தெரிகிறது.

ஆனால் அந்த தார் சாலை தரமற்று இருப்பதாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் அந்த பகுதி மக்கள் முறையிட்டும் காதில் வாங்கிக் கொள்ளாத அதிகாரிகள் கடமைக்கு சாலை போட்டு விட்டு சென்றதால் ஆத்திரமடைந்த அந்த பகுதி வாலிபர் பொதுமக்கள் உதவியுடன் தரமற்று இருக்கும் சாலையை நிரூபிக்க வெறும் கைகளால் பெயர்த்து எடுத்துள்ளார்.

இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி