பாக முகவர் ஆலோசனைக் கூட்டத்தில் பர்கூர் எம்எல்ஏ பங்கேற்பு

55பார்த்தது
ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பாக முகவர் ஆலோசனை கூட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட BLA2, BLC தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர் வி. எஸ். ஞானவேலன் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான கா. தேவராஜ்‌‌, முன்னாள் பர்கூர் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆம்பூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் இ. ஜி. சுகவானம் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர். சே. வில்வநாதன் கலந்து கொண்டனர்.

ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் மு. அசோகன் மற்றும் தலைமை பொதுக்குழு உறுப்பினர் வி. எம். பெருமாள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்கு தேர்தல் ஒருங்கிணைப்பு குழு மற்றும் BLA2, BLC, ஒன்றிய கழக நிர்வாகிகள், கிழக்கு ஒன்றிய செயலாளர், கிளை கழக பிரதிநிதிகள், ஆம்பூர் தொகுதி உட்பட்ட 8 ஊராட்சி நிர்வாகிகள், மதனாஞ்சேரி, பள்ளிப்பட்டு, இளைய நகரம், கொல்லகுப்பம், வெளுதிக்கா மணிபண்டா பகுதியில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி