வாலாஜாப்பேட்டை அடுத்த அனந்தலை கிராமத்தில் மலையை ஒட்டி செங்கல்சூளை உள்ளது. இந்த செங்கல் சூளையில் பெற்றோர்களுடன் தங்கி சிறுவர்கள் சிலர் வேலை செய்துவருவதாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின் பேரில் தாசில்தார் அருள் செல்வம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவு ராஜேஷ், 1098 ஆற்றுப்படுத்துனர் பர்ஜானா ஆகியோர் செங்கல் சூளையில் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இருந்த 4 சிறுவர்கள், 4 சிறுமிகள் என 8 பேரை மீட்டு பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.