ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் தமிழ் முதல்வன் திட்டம் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழ் முதல்வன் திட்டம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று செயலர் தெரிவித்தார்.