மின்மாற்றியை சூழ்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற கோரிக்கை!

81பார்த்தது
மின்மாற்றியை சூழ்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற கோரிக்கை!
பனப்பாக்கத்தில் இருந்து பள்ளூர் செல்லும் சாலையில் பெரிய தென்னல் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஏரிக்கரை மீது செல்லும் தார்சாலையின் ஓரத்தில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகள், குடிநீர் மேல்நிலை நீர்தேக்கதொட்டி, அரசு தொடக்கபள்ளி, விவசாய நிலங்களில் உள்ள பம்புசெட்டுகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது இந்த மின்மாற்றியின் மீது செடி, கொடிகள் வளர்ந்தும், சுற்றிலும் செடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. இதனால் மழை மற்றும் காற்று வீசும் நேரங்களில் மின் வினியோகம் தடைப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

மேலும் இரவு நேரங்களில் அருகிலுள்ள ஏரிக்கால்வாய் மற்றும் முட்புதர்களில் இருந்து விஷ ஜந்துக்கள் வீடுகளை நோக்கி வருவதால் குடி யிருப்பு வாசிகள் மிகுந்த அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றனர். ஆகவே மின்மாற்றியை சூழ்ந்து வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற துறை சார்ந்த அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி