உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சமீபத்தில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான 17வது பாராஒலிம்பிக் போட்டி பாரீசில் இன்று (ஆகஸ்ட் 28) கோலாகலமாக தொடங்குகிறது. செப்டம்பர் 8ம் தேதி வரை அரங்கேறும் இந்த போட்டியில் 184 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர்கள் பங்கேற்கின்றனர். உடல் குறைபாட்டுக்கு ஏற்ப விளையாட்டுகள் வகைப்படுத்தப்பட்டு நடத்தப்படுகிறது.