ராணிப்பேட்டை பிஞ்சி முதல் தெருவில் செயல்பட்டு வரும் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம், அந்தப் பகுதியில் சாலையில் குப்பை கொட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் ராணிப் பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், நகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது சாலையில் குப்பை கொட்டப்பட்டது உறுதியான நிலையில் தனியார் நிறுவனத் துக்கு ரூ. 10,000 அபராதம் விதித்தனர்.மேலும் சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் செயல்படுமாறு தனியார் நிறுவனத்திற்கு அறிவுரை வழங்கினர்.