ராணிப்பேட்டையில் ஆட்டோ மோதிய ஒருவர் பலி!

73பார்த்தது
ராணிப்பேட்டையில் ஆட்டோ மோதிய ஒருவர் பலி!
ராணிப்பேட்டையில் உள்ள வானாபாடி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவர் வாலாஜா அருகே சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தென்கடப்பந்தாங்கல் மேம்பாலம் வழியாக இருசக்கர வாகனத்தில்சென்றார்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ மோதியதில் தூக்கி வீசப்பட்ட பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி