ராணிப்பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் சரஸ்வதி, வாலாஜா ரயில் நிலையத்தில் இன்று திடீர் சோதனை நடத்தினார்.
அப்போது ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அஜய்ராம், ஆகாஷ் குமார், ரவீந்திர குமார், டியோ சரண்குமார், நவீன் குமார், திலீப் குமார், விஜயராம், பீகாரை சேர்ந்த சந்தோஷ் பிரசாத் ஆகிய 8 பேர் 3 பைகளில் 20 கிலோ கஞ்சா கடத்தியதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்தனர்.