வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள அரசு மருத்துவமனை பிணவறையில் ஒரு வாரமாக வைக்கப்பட்டுள்ள சடலத்தில் இருந்து வரும் துர்நாற்றம் காரணமாக நோயாளிகள், அருகாமை பகுதியில் வசிப்பவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அங்குள்ளவர்கள் கூறும்போது, "சடலத்தில் இருந்து வரும் கடுமையான துர்நாற்றம் காரணமாக இந்த பகுதியில் வேலை செய்ய முடியவில்லை, பலருக்கும் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படுகிறது" என்றனர்.