வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் பேரூராட்சி பொன்னையாற்றங்கரையில் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க தருமத்தியம்மாள் உடனுறை வில்வநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ தேர் திருவிழா மாதந்தோறும் பௌர்ணமி பிரதோஷ வழிபாடுகள் நடந்து வருகிறது. இதில் பொதுமக்கள் சுற்றுப்புற வாசிகள் கலந்து கொண்டு தரிசித்து செல்கின்றனர். இந்த நிலையில் கோவில் உட்பிரகாரத்தில் கனிவாங்கிய விநாயகருக்கு தனி சந்நிதி உள்ளது. இந்த நிலையில் நேற்று சங்கட சதுர்த்தியையொட்டி கனி வாங்கிய விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு அபிஷேக புனித நீர் விபூதி வழங்கப்பட்டது இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்றுப்புறவாசிகள் திரளானூர் கலந்து கொண்டு தரிசித்தனர்.