12 மடிக்கணினி திருடிய இளைஞர் ஓருவர் கைது

82பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட தனியார் பல்கலைக்கழக பகுதியில் அடிக்கடி மடிக்கணினி(லேப்டப்) திருட்டு போவதாக காட்பாடி காவல் நிலையத்துக்கு அடிக்கடி வந்த புகாரின் அடிப்படையில் காட்பாடி உள்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் பேரில் தணிப்பிரிவு காவல் துறை சேர்ந்த உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி, சிறப்பு உதவி ஆய்வாளர் சம்சுதீன், தலைமை காவலர் கணேசன் தணிப்பிரிவு
காவல் துறையுடன் நேற்று காலை 10: 00 மணி அளவில் தணியார் பல்கலைக்கழக 11-வது கேட்ட அருகில் தீவிர வாகன தணிகை ஈடுபட்டு ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது அந்த வழியாக வந்த நபரை அழைத்து விசாரணை செய்ய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். காவல் நிலைய அழைத்து வந்து தீவிர விசாரணை செய்ததில் ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டம் பொடி பள்ளி அஞ்சல் வரளி கிராமத்தைச் சேர்ந்த அனுமந்த நாயுடு மகன் ஸ்ரீ ராமு (வயது-24) என்பதும் தனியார் பல்கலைக்கழகத்திலும் அதன் சுற்றியுள்ள பகுதியிலும் சுமார்12 மடிக்கணினி திருடியது தெரிய வந்தது. உடனே ஸ்ரீ ராமுவிடம் இருந்த 12 மடிக்கணினி பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர், அடிக்கடி இதுபோன்று நடந்த திருட்டிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்த தணிப்பிரிவு காவல்துறைக்கு காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் பாராட்டு தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி