காட்பாடி அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் நகை திருட்டு

56பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேனூர் கிராமத்தில் வசித்து வந்தார். சௌந்தர்ராஜன் (66). இவர் கடந்த 8 ஆம் தேதி இரவு சேனூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த நகைகளை திருடி சென்றுள்ளனர்.
கோவிலுக்கு சென்ற சௌந்தரராஜன் மீண்டும் வந்து பார்த்தபொழுது வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது 20 சவரன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து விருதம்பட்டு காவல் நிலையத்தில் சௌந்தரராஜன் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு தேடி வந்த நிலையில்
சேனூர் கிராமத்தில் மூன்று பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் பதுங்கி இருப்பதயாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் அந்த மூன்று பேரையும் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சேனூர் சங்கர், அவினேஷ், ஹரீஷ் என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் மூன்று பேரும் சௌந்தரராஜன் வீட்டில் திருடிய 20 சவரன் நகை, காட்பாடி பகுதியில் உள்ள மேலும் 4 வீடுகளில் 17 சவரன் என வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு ரூபாய் 19 லட்சத்து 98 ஆயிரம் மதிப்புள்ள 37 சவரன் தங்க நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி