ஓடும் பேருந்தில் பற்றி எரிந்த தீ

53பார்த்தது
ஓடும் பேருந்தில் பற்றி எரிந்த தீ
மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி நேற்று(மே 11) இரவு அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, பேருந்தின் பின்பக்க டயரில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதனை கவனித்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். தொடர்ந்து, பயணிகள் இறக்கி விடப்பட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரரகள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், அந்த சாலையில் சென்ற வேறு பேருந்துகளில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து, சேதமடைந்த பேருந்தை மதுரை பணிமனைக்கு கொண்டு சென்றனர்.

தொடர்புடைய செய்தி