விபத்தில் இறந்த மாட்டை அப்புறப்படுத்தாத மாநகராட்சி

59பார்த்தது
வேலூர் மாநகரத்துக்கு உட்பட்ட அண்ணா சாலையின் வழியாக திருவண்ணாமலை ஆரணி விழுப்புரம் என பல ஊர்களில் இருந்து வரும் பேருந்துகள் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் என முக்கிய பிரதான சாலையாக உள்ளது அந்த சாலையில் கேப்பாராற்று சுற்றி திரிந்து வரும் மாடுகளால் சாலைகளில் சிறிய சிறிய விபத்துக்கள் ஏற்படுகிறது.
அதேபோல் இன்று வேலூர் கோட்டையின் நுழைவாயில் எதிரில் சுற்றி திரிந்து கொண்டிருந்த மாடுகளில் மேல் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மாட்டின் தலை நசுக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளது அதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக மாநகராட்சிக்கு பலமுறை கால் செய்தும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது மேலும் ஒரு மணி நேரம் ஆகியும் அடிபட்டு இறந்த மாட்டை அப்புறப்படுத்தாததால் அவ்வழியாக செல்லும் மக்கள் தலையில் அடிபட்டு இறந்து கிடந்த மாட்டின் தலையில் துணியை சுற்றி சாலையில் ஓரமாக விட்டு சென்றனர்.

பின்பு மாட்டின் உரிமையாளரே எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

வேலூர் மாவட்ட முக்கிய பிரதான சாலையில் மாடு சுற்றி வருவதை குறித்து பலமுறை மாநகராட்சிக்கு புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மேலும் வேறு ஏதேனும் ஒரு அசம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன்பும், கேப்பாரற்று சாலையில் சுற்றித் திரியும் மாட்டின் உரிமையாளர்கள் மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

தொடர்புடைய செய்தி