தெற்கு சீனாவின் நேனிங் பகுதியில் புதிதாக பொருத்தப்பட்ட கழிவுநீர்க் குழாயை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அழுத்த சோதனை செய்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அழுத்தம் தாங்காமல் குழாய் திடீரென வெடித்தது. இதனால் மனிதர்களின் மலம், திரவ வடிவில் சுமார் 33 அடி உயரத்துக்கு வானை நோக்கிச் சீறியது. பின்னர் அது கீழே விழும்போது அருகே சென்றுகொண்டிருந்த மக்கள், பைக்குகள், கார்கள் என அனைத்தின் மீதும் விழுந்தது. இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.