இந்தியாவில் வாழ்ந்தாலும் சான்றிதழ் கிடைக்காததால் அவதி

72பார்த்தது
*34 ஆண்டுகளாக இந்தியாவில் நாங்கள் வாழ்ந்தாலும் தற்போது வரை எங்களுக்கு பிறப்பு சான்றிதழ் கிடைக்காததால் பல்வேறு அடிப்படை உரிமைகள் மற்றும் தேவைகள் கிடைக்கவில்லை என இலங்கை வாழ் முகாம் தமிழர்கள் கலந்தாய்வு கூடத்தில் கோரிக்கை*


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக 7வது தள கூட்ட அரங்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் அதிகாரிகள் மற்றும் இலங்கை முகாம் தமிழர்கள் பிரதிநிதிகளுடன் அவர்களின் தேவைகள் மற்றும் சவால்கள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்த கலந்தாய்வு ஆலோசனை கூட்டத்தில் திருப்பத்தூர், சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள இலங்கை முகாம் தமிழர்கள் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் அலுவலர் சச்சிதானந்த வளன் மைக்கேல் பங்கேற்று மூன்று மாவட்டங்களை சேர்ந்த இலங்கை முகாம் வாழும் தமிழர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டனர். இக்கூட்டத்தில் இலங்கை முகாமில் வாழும் தமிழர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் அவர்களின் தேவைகள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் அலுவலர்களிடம் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி