திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூ டவுன் பகுதியை சார்ந்த விக்னேஷ் இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கந்திகுப்பம் காலபைரவர் கோவிலுக்கு 2 சிறுவர்கள் உட்பட 8 பேருடன் காரில் சென்றுள்ளனர்.
பின்னர் சாமி தரிசனம் முடித்துவிட்டு திரும்பும் வழியில் நாட்றம்பள்ளி அடுத்த வையனபள்ளியில் உள்ள ஆனந்தாஸ் ஹோட்டலில் டீ குடிப்பதற்காக கரை நிறுத்தி உள்ளனர். அங்கு வாங்கி கொடுக்கப்பட்ட சமோசா தரமற்ற நிலையில் இருந்ததாகவும், குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கப்பட்ட பாதாம் மில்க் கெட்டுப் போய் இருந்ததாகவும் இது குறித்து ஓட்டலின் உரிமையாளரிடம் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கேட்டுள்ளனர்.
இதற்கு சரியான பதிலை அளிக்காமல் உரிமையாளர் தரை குறைவாக நடந்து கொண்டுள்ளார். இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.