*குழந்தைகளின் உரிமைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா ஒருங்கிணைந்து கொடி அசைத்து துவக்கி வைத்தனர். *
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக குழந்தைகளின் உரிமைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இருந்து தூய நெஞ்சக் கல்லூரி வரை சென்று மீண்டும் ஆட்சியர் அலுவலகம் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முன்னதாக விழிப்புணர்வு பலகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கையொப்பமிட்டு தொடர்ந்து பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்
மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு பொறுப்பு அலுவலர் ஜெயவேல் மேற்பார்வையில் செவிலியர் மாணவிகள் அங்கன்வாடி பணியாளர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த பேரணியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த வாசகங்கள் பொருந்திய பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலம் சென்றனர்.