ஆக்கிரமிப்பு போலீசாருக்கும் பொது மக்களுக்கும் தள்ளுமுள்ளு

78பார்த்தது
திரும்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனரி காலனி பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 15 ஆண்டு காலமாக சாலை வசதி இல்லாமல் சுடுகாட்டிற்கு செல்வதற்கு கூட வழியில்லாமல் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் அப்பகுதிமக்கள் பொது வழியாக பயன்படுத்தி வந்த பாதையை அதே பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி, பிரவீனா, பிரியா, சார்லஸ், கண்ணதாசன் ஆகிய ஐந்து பேர் ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்துள்ளதாகவும்

இதனால் இறந்தவர்களின் உடலை கூட‌ எடுத்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் இது குறித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அதேபோல் துறைச் சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்து இருந்தனர்.

இந்த நிலையில் இன்று நாட்றம்பள்ளி வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் வருவாய்த் துறையினர் மற்றும் 100 போலீசார் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்

அப்போது முள்வேலியை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது போலீஸாருக்கும் ஆக்கிரமிப்பாளருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து விஜயலட்சுமி, பிரவீனா, பிரியா ஆகிய மூன்று பேர் வாணியம்பாடி மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். சார்லஸ், கண்ணதாசன் ஆகிய இருவரும் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி