*திருப்பத்தூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் அரசு மேல்நிலைப்பள்ளி கூடுதல் கட்டிடங்களை தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்*
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட தாமலேரி முத்தூர் ஊராட்சி பகுதியில் உள்ள அரசு இருபாலர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நபார்டு வங்கி திட்டத்தின் 1கோடியே 28 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஆறு வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிட பணிகள் முடிவடைந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதே போன்று வாணியம்பாடி மற்றும் மாதனூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி கட்டப்பட்ட கட்டிடங்களும் திறந்து வைக்கப்பட்டன.
நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளாட்சி பிரதிநிதிகள் முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றியதை தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
மேலும் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பள்ளி வளாகத்திற்குள் மரக்கன்று நட்டு வைத்தார்.