திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காந்திநகர் பகுதியில் ராமு வயது 52. இவர் கடையில் ஹான்ஸ் பாக்கெட் விற்பனை செய்வதாக ஜோலார்பேட்டை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் ராமாவின் மளிகை கடைக்குச் சென்று சோதனை மேற்கொண்டதில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 18 பாக்கெட் அளவில் ஐந்து கிலோ ஹான்ஸ் பாக்கெட்டை பறிமுதல் செய்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட் விற்றதாக நேற்று (செப்டம்பர் 12) இரவு 8 மணி அளவில் ராமுவை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.