வீரமரணம் அடைந்த 213 காவலர்களுக்கு 63 குண்டுகள் முழங்க அஞ்சலி

70பார்த்தது
*காவலர் வீரவணக்க நாளான இன்று நாடு முழுவதும் வீர மரணம் அடைந்த 213 காவலர்களுக்கு 63 குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஞ்சலி செலுத்தினார். *

1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் ஒளிந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர் அதை நினைவு கூறும் வகையில் வருடம் தோறும் நாடு முழுவதும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் 01-09- 2023 முதல் 31 8 2024 வரை ஒரு வருடத்தில் நாடு முழுவதும் பணியாற்றக்கூடிய காவலர்கள், பி எஸ் எப், சி ஐ எஸ் எப், சி ஆர் பி எஃப், rpf உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பணியாற்றும் 213 காவலர்கள் குற்றவாளிகளை பிடிக்கும் போது வீர மரணம் அடைந்துள்ளனர்.

அவர்களின் வீர மரணத்தை முன்னிட்டு வீரவணக்க நாளான இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் தொடர்ந்து அவரது தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டு 21 காவலர்கள் 3 சுற்றுள் என மொத்தம் 63 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி