நெமிலி அருகே டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி
நெமிலியை அடுத்த காட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 32). இவர் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று (நவம்பர் 22) சுப்பிரமணி விவசாய பணிக்காக காட்டுப்பாக்கம் ஏரிக்கரை வழியாக டிராக்டரில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மண்சரிவு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சுப்பிரமணி டிராக்டருக்கு அடியில் சிக்கிக்கொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள், விபத்தில் சிக்கிய அவரை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டு, சிகிச்சைக்காக மேல்களத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவம்னைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார். இந்த விபத்து குறித்து பாணாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.