மின் கம்பிகளை திருடிய மூன்று சிறுவர்கள் கைது!

67பார்த்தது
மின் கம்பிகளை திருடிய மூன்று சிறுவர்கள் கைது!
நெமிலியை அடுத்த உளியநல்லூர் கிராமம் பஜனை கோவில் தெருவில் வசித்து வருபவர் ஜெய்சங்கர் (வயது 50). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்து பம்பு செட்டிற்கு செல்லும் மின்கம்பி திருட்டு போனதாக நெமிலி போலீசில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் போலீசார் பனப்பாக்கத்தில் இருந்து கீழ்வீதி செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே நடந்துவந்த துறையூர் காளிகாபுரத்தை சார்ந்த 3 சிறுவர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி அவர்கள் கையில் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர்.

அதில் சுமார் 13 கிலோ எடையுடைய மின்கம்பி இருந்தது. மேலும் விசாரணையில் அது ஜெய்சங்கரில் நிலத்தில் திருடியது தெரிய வந்தது. இதைய டுத்து 3 சிறுவர்களையும் போலீசார் சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you