டி20 கிரிக்கெட் தொடரில் அதிவேகமாக சதமடித்த 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார் உர்வில் பட்டேல். சையத் முஸ்டாக் அலி கோப்பை போட்டியில் திரிபுராவுக்கு எதிரான ஆட்டத்தில் உர்வில் பட்டேல், 28 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் 2018 சையத் முஸ்டாக் அலி கோப்பை போட்டியில் ரிஷப் பண்ட் 32 பந்துகளில் சதமடித்து இருந்தார். அண்மையில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் உர்வில் பட்டேலை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.