நயன்தாரா - விக்னேஷ் சிவனின் காதல் வாழ்க்கை நெட்பிளிக்ஸ் தளத்தில் ஆவணப்படமாக வெளியானது. இதில் தனுஷ் தயாரித்திருந்த 'நானும் ரவுடி தான்' திரைப்படத்தின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தனது அனுமதியின்றி அந்த படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதாக கூறி நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது தனுஷ் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், நயன்தாரா தனக்கு ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.