தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள கீர்த்தி சுரேஷ், ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்யப்போகிறார் என கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்து எந்தவொரு அறிவிப்பையும் அவர் வெளியிடாமல் இருந்த நிலையில் தற்போது மெளனம் கலைத்துள்ளார். அதன்படி, தனது காதலர் ஆண்டனியை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தினார் கீர்த்தி சுரேஷ். 15 ஆண்டுகளாக தாங்கள் காதலித்து வருவதாக கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.