மாணவரின் புத்தகத்தில் சாதி பெயரை எழுதிய ஆசிரியர் சஸ்பெண்ட்

55பார்த்தது
மாணவரின் புத்தகத்தில் சாதி பெயரை எழுதிய ஆசிரியர் சஸ்பெண்ட்
திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி மோட்டூர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக விஜயகுமார் என்பவர் பணியாற்றுகிறார். இவர் அந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரின் புத்தகத்தை வாங்கி அதில் சாதி பெயரை எழுதியதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்திய மாவட்ட கல்வி அலுவலர், விஜயகுமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதோடு அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி