நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் NETFLIX நிறுவனம் மீது நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது தயாரிப்பில் வெளியான 'நானும் ரவுடி தான்' திரைப்படத்தின் காட்சிகளை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்கள் திருமண வீடியோவில் அனுமதியின்றி பயன்படுத்தியதாக மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.