ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக ஏபிஎம் சர்ச் பகுதியைச் சேர்ந்த சரவணன் (28) என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று (செப்.,16) மாலை இரட்டைக் ரயில்வே சுரங்கப்பாதை அருகில் நின்றிருந்தவர், திடீரென பாட்டிலால் கழுத்தை தனக்குத் தானே அறுத்துக் கொண்டார். ரத்தம் பீறிட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இது குறித்து சம்பவம் அடைந்த அரக்கோணம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.