300 ஆண்டுகள் பழமையான வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம்!

63பார்த்தது
300 ஆண்டுகள் பழமையான வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம்!
பாணாவரத்தை அடுத்த கூத்தம்பாக்கம் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராதா, ருக்மணி சமேத வேணு கோபால சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் நடந்து முடிந்த நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கணபதி பூஜை, சங்கல்ப ஹோமம், கோ பூஜை, லட்சுமி ஹோமம், 108 கலச பூஜை, 108 மூலிகைகள் கொண்டு சிறப்பு யாக பூஜை, பூர்ணாஹூதி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க, மங்கள இசை இசைக்க, யாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடாகி கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தீபாராதனைகள் காட்டப்பட்டு மஹா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

அதனையடுத்து கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் வேணுகோபால் சுவாமி, பாமா, ருக்மணி சுவாமிக்கு சிறப்பு பூஜை தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி