வேலூர் மாவட்டத்தில் 24 மதுவிலக்கு வழக்குகள் பதிவு!

83பார்த்தது
வேலூர் மாவட்டத்தில் 24 மதுவிலக்கு வழக்குகள் பதிவு!
வேலூர் மாவட்டம் முழுவதும் கள்ள சந்தையில் மது விற்பனை நடைபெறுகிறதா என கண்காணிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் நேற்று மாவட்ட முழுவதும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முயன்றதாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 221 மது பாட்டில்கள் மற்றும் 24 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வேலூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி