சாரம் சரிந்து விழுந்து ஒருவர் படுகாயம் நான்கு பேர் காயம்.

63பார்த்தது
ஆம்பூரில் மேம்பாலம் பணியின் போது சாரம் சரிந்து விழுந்து விபத்து. ஒருவர் படுகாயம், 4 பேர் காயம்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை கட்டுபடுத்த ஓ. ஏ. ஆர். திரையரங்கம் முதல் சான்றோர்குப்பம் வரை ரூபாய் 142 கோடி செலவில் மேம்பாலம் கட்டுமான பணி கடந்த 2 ஆண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

இப்பணியில் வட மாநில தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர்
ஷிப்ட் முறையில் இரவு பகலாக பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இரவு பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டுமான பணிக்காக போடப்பட்டு இருந்த சாரம் திடீரென சுமார் 25 மீட்டர் அளவிற்கு சரிந்து விழுந்துள்ளது.

விபத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி நரேஷ் என்பவர் படுகாயம் அடைந்தார். 4 பேர் காயம் அடைந்தனர். காயம் மற்றும் படுகாயம் அடைந்தவர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலீஸார் சாரம் சரிந்து விழுந்ததில் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனை தொடர்ந்து போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. விபத்து குறித்து நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி